spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதடை ... அதை உடை ... புதிய சரித்திரம் படை ...

தடை … அதை உடை … புதிய சரித்திரம் படை …

-

- Advertisement -

பாலின பாகுபாடால் கடும் நெருக்கடியில் தத்தளித்தவருக்கு தக்க சமயத்தில் உதவிய சக திருநங்கை மற்றும் தம்பதியினர் படிக்க வைத்து, பயிற்சியளித்து, பணி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.தடை ... அதை உடை ... புதிய சரித்திரம் படை ...“ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற கூற்றுக்கிணங்க, பொறியியல் படிப்பில் இடைநிற்றலான திருநங்கையை, சக திருநங்கையும் சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து படிக்க வைத்து, பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்ற வழிவகை செய்துள்ள சம்பவம், கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

“நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவாங்க … ரூவா இருந்தா புடுங்கிக்குடுவாங்க … ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம்” என்ற அசுரன் படத்தின் வசனம், “கல்வியே சிறந்த ஆயுதம்”என உணர்த்த ஓங்கி ஒலித்த வசனம். இந்த வசனத்தை நினைவு கூறும் வகையில், பாலின ஒடுக்குமுறைகளில் இருந்து மீள, தங்கள் வாழ்வை மேம்படுத்த, “கல்வியே சிறந்த ஆயுதம்” எனக் கருதியவர்களே இந்த திருநங்கைகள்.தடை ... அதை உடை ... புதிய சரித்திரம் படை ...புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட சஜானா, 2017 ஆம் ஆண்டில் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ECE படிப்பில் சேர்ந்தார். இரண்டாம் ஆண்டு படித்து முடித்து, மூன்றாம் ஆண்டு படிப்பை தொடரும் முன், தன் பாலினத்தை உணர்ந்த சஜானா, கல்லூரி படிக்கும்போது திருநங்கைக்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.  ஆண் பாலினமாக கல்லூரியில் படித்து வந்த சஜானாவுக்கு, திருநங்கையாக மாறிய பின்னர், படிப்புக்காக வழங்கப்பட்ட ஸ்காலர்சிப் உள்ளிட்ட சலுகைகள் தடைபட்டன. பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த சஜானாவால், பொறியியல் படிப்பை தொடர முடியவில்லை.தடை ... அதை உடை ... புதிய சரித்திரம் படை ...நெருக்கடிக்கு தள்ளப்பட்ட சஜானா, ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநரான அனுஷ்யா என்ற திருநங்கையின் அரவணைப்பில் இருந்து வந்தார். நன்றாக படித்து வந்த சஜானாவுக்கு, படிப்பின் மீதான தனது ஆர்வம் மேலோங்கியே இருந்தன. தன் ஆர்வம் குறித்து திருநங்கை அனுஷ்யாவிடம் சஜானா தெரிவிக்க, பள்ளி படிப்பையே தாண்டாத திருநங்கை அனுஷ்யா, சஜானாவை எப்படியாவது படிக்க வைத்து, வாழ்வில் உயர்த்த திட்டமிட்டார். ஆட்டோ மற்றும் கார் ஓட்டி சம்பாதித்த பணத்தை சஜானாவிடம் வழங்கினார். ஆனால், அத்தொகை போதுமான அளவில் இல்லை. லட்சங்களை தொடும் கல்வி கட்டணத்தால், லட்சியங்கள் தள்ளிப்போனது.தடை ... அதை உடை ... புதிய சரித்திரம் படை ...இந்த நிலையிலே, திருநங்கை அனுஷ்யா தான் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த மணி – லதா தம்பதியிடம், சஜானாவின் நிலை மற்றும் படிப்பில் உள்ள நாட்டம் குறித்து  தெரிவித்திருக்கின்றார். அப்போது, சஜானாவை சந்தித்த மணி – லதா தம்பதியினர், சஜானவின் ஆர்வத்தை அறிந்து, அவரின் கனவை நனவாக்க, தாங்கள் நடத்தி வரும் Pratibodh Foundation அமைப்பு மூலம், மூடப்பட்ட கல்லூரி வாசலை திறந்து வைத்து, சஜானாவின் கனவை நனவாக்கினர். கல்வி கட்டணம் வழங்கியதோடு மட்டுமின்றி, மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி உதவினர். கார் ஓட்டுநர் வருமானத்தில் அனுஷ்யாவும் தன்னால் முடிந்த அளவிலே சஜானாவுக்கு உதவி செய்தார். 2021 ஆம் ஆண்டு மீண்டும் தன் கல்லூரி பயணத்தை தொடங்கிய சஜானா, அரியரே வைக்காமல் ECE பொறியியல் படிப்பில் 75 % மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தடை ... அதை உடை ... புதிய சரித்திரம் படை ...படிப்பு முடித்த கையோடு, கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் பணிக்கு சேர்ந்த சஜானாவுக்கு, அங்கு காட்டப்பட்ட பாலின பாகுபாடுகளால் பணியில் இருந்து விலகினார். இதனை அறிந்த மணி – லதா தம்பதி, சஜானாவுக்கு மீண்டும் உதவ முன் வந்தனர். அவர்கள் ஹைதராபாத்தில் நடத்தும் சாஃப்ட்வேர் கம்பெனியில், மென் பொறியாளருக்கான பயிற்சி மற்றும் வேலை வழங்கி உள்ளனா். ஒரு வருடத்துக்கும் மேலாக, Microsoft Product-களான Windows Admin, Azure Administrator உள்ளிட்ட மென்பொருள் சார்ந்த படிப்புகள் கற்றுத் தரப்பட்டது. கம்யூனிகேசன் ஸ்கில், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், செல்ஃப் கான்ஃபிடண்ட் என மெருகேரிய சஜானா, பிரபல MNC நிறுவனமான L&T கம்பெனியில், சுயமாக நேர்காணலுக்கு சென்றார்.தடை ... அதை உடை ... புதிய சரித்திரம் படை ...நான்கு சுற்றுகளில் வென்று, மாதம் ரூ.40,000 ஊதியத்தில், சிஸ்டம் மேனேஜ்மென்ட் கன்சல்டண்டாக பணி நியமனம் பெற்றார். கோவையில் உள்ள கிளையில் தற்போது சஜானா இரண்டு வாரமாக மென்பொறியாளராக பணியாற்றி வருகின்றார். ஊர் கூடி தேர் இழுப்போம் என்று வாசகத்துக்கிணங்க, திருநங்கை ஒருவரை படிக்க வைத்து சமூகத்தில் உயர்த்த, படிப்பறிவில்லா சக திருநங்கை அனுஷ்யா மற்றும் சமூக ஆர்வலர்களான மணி-லதா தம்பதியினர், சஜானா கனவுக்கு உயிரூட்ட, சஜானாவோ, கல்வி பயின்றால் சமூகத்தில் உயரலாம் என ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்துக்கும்  நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றார்.தடை ... அதை உடை ... புதிய சரித்திரம் படை ...சாதிய, வர்க்க ஒடுக்குமுறைகள் ஒருபுறம் இருக்க, பாலின பாகுபாடு ஒடுக்குமுறையால் நெருக்கடியில் தவிக்கும் திருநங்கைகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டியது பொது சமூகத்தின் பொறுப்பு. படிக்க ஆர்வம் உள்ள சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் திருநங்கைகளுக்கு, சமூக நலத்துறை மூலம் தாமதிமின்றி நிதியுதவி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. சாலைகளில் கை ஏந்தி இரத்தல் எடுக்கும் நிலை மாற, இறக்க குணமும் ஈர நெஞ்சமும் இருந்தால், திருநங்கைகள் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதை உணர்த்துகிறார் சாதனை திருநங்கை சஜானா.

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்…நடுத்தர மக்கள் அதிர்ச்சி

we-r-hiring

MUST READ