spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவாக்காளர் திருத்தப் பணிகளால் குழம்பும் மக்கள்..!! தெளிவு படுத்துமா தேர்தல் ஆணையம்??

வாக்காளர் திருத்தப் பணிகளால் குழம்பும் மக்கள்..!! தெளிவு படுத்துமா தேர்தல் ஆணையம்??

-

- Advertisement -

People are confused by voter registration correction work..!! Will the Election Commission clarify??

S.I.R. எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் (நவ.4) நான்காம் தேதி தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் அது நடைபெறுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, உச்சநீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. சட்டப் போராட்டம் ஒரு பக்கம் என்று சொன்னாலும், வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியல் அடிப்படையில், B.L.O.-க்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று படிவங்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். டிசம்பர் மாதம் நான்காம் தேதிக்குள் இந்தப் படிவங்களை நிரப்பி அதைச் சமர்ப்பித்தாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் பெயர்கள் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.

we-r-hiring

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரைக்கும், டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் மூன்று முறை அவர்கள் வர இருக்கிறார்கள். அந்த நேரத்தில் நாம் வேலைக்குச் சென்று விட்டால், ஏதாவது பணிகளுக்குச் சென்று விட்டால், வீட்டில் இல்லாமல் இருந்தால், நம்முடைய வாக்குரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதேநேரம் இந்தப் பணி முடிந்த பிறகு ஆன்லைனில் நாம் தொடர்பு கொண்டு சேர்க்கின்ற ஒரு வழியும் இருக்கிறது. அது தேர்தல் நேரத்தில் இது பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏழை எளியவர்கள், உழைப்பாளர்கள், கிராம மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் எஸ்.ஐ.ஆர் முறையே மக்களிடையே பெரும் பீதியையும், மன உலைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் சென்னை, கோவை, திருப்பூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் பணிச்சூழல் காரணமாக குடும்பங்களுடன் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களிலேயே வாக்குரிமையை வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் B.L.O.-க்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் சரியாக அவர்களால் அங்கு இருக்க முடியுமா?? அவ்வாறு தவறும் பட்சத்தில் தங்கள் வாக்குரிமை பறிபோகுமா என அஞ்சுகின்றனர்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்கு ஒரு தொலைபேசி எண்ணை தேர்தல் ஆணையம் தந்திருக்கிறது. ஆனால் அதனை எழுத படிக்க தெரியாத ஏழை எளியவர்கள், தினக்கூலிகள், கிராம மக்கள் எப்படி பயன்படுத்த முடியும். சாதாரணமாகவே வாடிக்கையாளர் சேவை மையங்கள், உதவி மையங்களை நாடும் பொதுமக்கள் வெகுநேரம் அலைக்கழிக்கப்படுவதுண்டு. அதில் மொழிப்பிரச்சனை என்கிற மற்றொரு சிக்கலும் உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் வாக்களித்து இருந்தாலும் 2005 ஆம் ஆண்டு எங்கு வாக்களித்தார் என்ற விவரம் தேவைப்படுவதால் பொதுமக்கள் அந்த தகவலை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன்,

* 2002-ஆம் ஆண்டில் வாக்களித்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றி குடியேறியிருந்தால், வாக்குரிமை தற்போது எந்த இடத்தில் அமையும்?

* மனைவியின் வாக்குரிமை அவரது சொந்த ஊரில் உள்ளது. இப்போது உள்ள முகவரி ஆதாரமாக ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை என்ற இரண்டு ஆவணங்கள் மட்டுமே உள்ளன. இவை மட்டும் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ள முடியுமா?

* படிவத்தில் உறவினர் குறித்து தகவல் கட்டாயம் நிரப்ப வேண்டுமா?

* 2024 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது. தற்போது பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

* குடும்பத்தில் எவரேனும் வெளிநாட்டில் வேலையில் இருந்தால் அவருடைய படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?

* பெற்றோர் 2002 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

* கணக்கீட்டு படிவத்தில் தகவல்களை தவறாக பதிவிட்டால் மீண்டும் புதிய படிவம் வழங்கப்படுமா?

*BLOக்கள் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுவதில்லை. இதனால் படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரிசெய்வது?

*BLOக்கள் படிவங்களை வழங்க வீடு தேடி வரும்போது அதனை பெற முடியாத பட்சத்தில், மீண்டும் அந்த விண்ணப்பங்களை பெறுவது எப்படி??

*டிசம்பர் 4ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என கூறப்படும் நிலையில், அதனை இப்போதிலிருந்தே செய்யாதது ஏன்?

*குறிப்பிட்ட தேதிக்களில் எந்த ஏரியாக்களுக்கு BLOக்கள் விண்ணப்பங்கள் வழங்க வருவார்கள் என்பது முன்கூட்டியே அறிவிக்கப்படுமா? இல்லையெனில் வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்களின் நிலை என்ன?

இவ்வாறாக மக்களிடம் உள்ள பல கேள்விகளை பரிசீலித்து, குழப்பங்களயும், சந்தேகங்களையும் தீர்க்க நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

MUST READ