அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவில் வதந்தி பரவி வருகிறது. இந்த நிலையில், டிரம்ப்புக்கு ஏதாவது ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளதாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளது சந்தேகத்தை கிளப்புவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல் குறித்து வெளியாகும் செய்திகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- அதிபர் டிரம்ப்-ஐ, கடந்த ஜுலை மாதம் பேட்டி எடுக்கிறபோது அவருடைய கைகளில் சிராய்ப்புகளும் வீக்கங்களும் காணப்பட்டன. ஆனால் அவருக்கு வயதாகிவிட்டதால் அப்படி தெரிவதாக சொல்லப்பட்டது. ஆனால் அவரது உடலுக்குள் பிரச்சினை இருப்பதால், வெளியில் இதுபோன்று அறிகுறிகள் தெரிவதாக ஒரு தரப்பினர் சொல்லிவந்தனர். இந்த நிலையில்தான் தற்போது அதிபர் டிரம்புக்கு கால்கள் வீங்கதொடங்கிவிட்டன. மேலும், நேற்று முன்தினம் முழுவதும் அவர் பொதுவெளியில் தென்படவில்லை.
இந்த நிலையில் டிரம்ப்-க்கு உடல் நிலை சரியில்லை. அவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு என்று வதந்திகளை கிளப்பிவிட்டனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தான் அது வதந்தி இல்லை. உண்மை என்று நிரூபிக்கும் விதமாக ஒருவர் பேட்டி அளித்துள்ளார். ஒரு தலைவரின் உடல்நிலை குறித்து இரண்டாம் நிலையில் இருப்பவர், எதிர்மறையாக கருத்து சொல்லமாட்டார். ஆனால் டிரம்ப்க்கு பிரச்சினை இல்லை. அப்படி எதாவது ஆனாலும் இந்த 4 வருட ஆட்சியை முடித்துவிடுவார் என்று சொல்வது, சந்தேகத்தை மேலும் வலுக்க வைக்கிறது. அப்போது டிரம்ப்க்கு ஏதாவது பிரச்சினை உள்ளது என்று தான் தோன்றும். இப்படி ஒரு தகவலை சொல்லி இருப்பவர் யார் என்றால்? அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.
அமெரிக்காவின் இளம் துணை அதிபரான ஜே.டி.வான்ஸ், ஐரோப்பிய ஒன்றிய பத்திரிகையாளர் ஒருவரை கூப்பிட்டு பேட்டி அளிக்கிறார். அப்போது டிரம்ப் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்திவிடுவார் என்று சொன்னார். மேலும், டிரம்ப்க்கு எதாவது ஆனால் கூட தான் பதவி ஏற்றுக்கொண்டு ஆட்சியை வழிநடத்த தயாராக உள்ளதாக சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அப்போது டிரம்ப்க்கு பெரிய அளவில் பிரச்சினை இருக்கிறது என்பது ஜே.டி.வான்ஸ் சொல்வதை வைத்துதான் வெளியில் தெரிந்தது. இதனால் அமெரிக்காவில் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே, அமெரிக்காவில் இருக்கும் 70 சதவீத இந்தியர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய கிரீன் கார்டையும், H1B விசாவையும் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறார்கள்.
H1B விசா வழங்கும் திட்டத்தையே ரத்து செய்ய பார்க்கிறார். மேலும் இந்த திட்டத்தையே ஒரு திருட்டு திட்டம் என்று டிரம்புக்கு நெருக்கமான அதிகாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதை வைத்து பலரும் உள்ளே நுழைந்து அமெரிக்கர்களை காலி செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அமெரிக்க குடிமக்களைவிட அதிகமாக வெளிநாட்டினர் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்கர்களுக்கு வாழ்க்கையே போய்விட்டது எனவே கிரீன் கார்டு மற்றும் H1B விசா வழங்குவதை குறைத்து, தேவை ஏற்பட்டால் மட்டும் ஆட்களை எடுப்போம் என்று சொன்னார்கள்.
இதனிடையே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கு பிறகு டிரம்ப் ஹாட்லைனில் தொடர்பு கொண்டபோதும், மோடி எடுக்கவில்லை. அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து மேலும் 15 ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிகாரிகள், H1B விசாவில் கை வைத்துவிட்டார்கள். அமெரிக்காவில் படிப்பவர்கள், படித்துவிட்டு அங்கே வேலை பார்க்க விரும்புபவர்கள், தற்காலிகமாக பணிபுரிபவர்கள் என 70 சதவீதம் பேருக்கு பிரச்சினையை கொடுக்கப் போகிறார்கள். டிரம்புக்கு உடல்நிலை சரியில்லை என்கிற விவகாரமும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையாகவே டிரம்ப்க்கு உடம்பு சரியில்லை என்பது தான் உண்மை. அதற்கு காரணம் துணை அதிபர் ஆட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னால், அது எந்த வகையில் சரியாக இருக்கும். டிரம்புக்கு என்ன ஆனது? என்கிற பரபரப்பு அமெரிக்காவில் உள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி, ஜப்பான் சென்றுவிட்டார். அடுத்து சீனா செல்கிறார். அங்கு புதினை சந்திக்கிறார். டிரம்ப் ஏற்கனவே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம், கிம் ஜாங் உன்-ஐ மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், அவர் மிகவும் அன்பானவர் என்றும் டிரம்ப் சொன்னதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் சந்தேகம் மேலும் வலுக்கிறது. ஏதோ ஒன்று உள்ளே நடப்பது போன்றுதான் தெரிகிறது. ஆனால் என்ன என்கிற விவரம் தெரியவில்லை. உலகத்திலேயே அதிகம் வரி விதிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்குதான். அதற்கு பிறகு தான் மற்ற நாடுகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்படி வரி விதித்து பல நாடுகளின் வாயில் மண்ணை போட்ட டிரம்ப், அமெரிக்காவிலும் H1B விசா, கிரீன் கார்டில் கை வைத்துள்ளார். இதனால் பல நாட்டினரின் சாபம் வந்துள்ளது. எனவே என்னதான் நடக்கிறது என்று பொருத்திருந்துதான் பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்