spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைடிடிவி,ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டு! எடப்பாடிக்கு விரைவில் கல்தா! உமாபதி நேர்காணல்!

டிடிவி,ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டு! எடப்பாடிக்கு விரைவில் கல்தா! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பிடுங்கி விடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நேற்று மாலை நீக்கப்பட்ட நிலையில், ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செங்கோட்டையனின் அலுவலகத்தில் இருந்து ஒரு ஆடியோவை ரிலீஸ் செய்வதாக மிரட்டல் விடுத்தனர். அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், தம்மை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் கிடையாது என்று சொன்னார். அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிக்கு முன்பே கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளாகவும், அவருக்கு முன்பே தான் கட்சியில் சேர்ந்ததாகவும் சொல்கிறார். கொடநாடு கொலை வழக்கில் பலர் கொல்லப்பட்ட நிலையில், அந்த வழக்கின் விசாரணை நிலை என்ன என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளர் என்பதால், நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் சொல்கிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது, எழுதப்பட்ட அதிமுக சட்ட விதிகளின் படி பொதுச்செயலாளர் என்பவர் லட்சக்கணக்கான கட்சி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. நீதிமன்றத்திற்கோ, தேர்தல் ஆணையத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தால் எடப்பாடி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. செங்கோட்டையன் தற்போது அதையே தான் கையில் எடுத்திருக்கிறார். அவர் வழக்கு தொடரப் போவது உறுதியாகும்.

அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் - செங்கோட்டையன்..

அடுத்தபடியாக 1980-களின் இறுதியில் எடப்பாடி பழனிசாமி ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தார். இது பொதுவெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. இந்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது செங்கோட்டையன் தான். எடப்பாடி பழனிசாமியின் தாயார் உதவி கேட்டு செங்கோட்டையனிடம் சென்றுள்ளார். அதனால் செங்கோட்டையன், அப்போதைய காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் பேசி, நம்முடைய கட்சியை சேர்ந்தவர். கொலை வழக்கில் சிக்கியுள்ளார். அவரை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி, வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றினார்.

அதை குறித்து இன்றைக்கு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் எதுவும் பேசவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அதை பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. செங்கோட்டையன், அந்த காலத்திலேயே அமைச்சராக இருந்தவர். அவரை பார்த்து நாமும் ஒரு நாள் சட்டமன்ற உறுப்பினர் ஆக மாட்டோமா என்று ஏங்கியவர் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை தாண்டி சென்று முதலமைச்சராகிவிட்டார். எல்லாவற்றையும் செங்கோட்டையன் பொறுத்துக் கொண்ட நிலையில் இன்றைக்கு அவரை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளார்.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மு.க.ஸ்டாலின்! -  இபிஎஸ் 

எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய மகன் மிதுன் பழனிசாமியை அரசியலில் வாரிசாக கொண்டுவர திட்டமிட்டுள்ளார். நாம் ஏற்கனவே சொன்னதை போல தேர்தல் நெருங்க நெருங்க எல்லாம் மாறும். கடைசியில் கட்சி செங்கோட்டையன் கட்டுப்பாட்டிற்குள் போய்விடும். காரணம் அவரை பாஜக இயக்குகிறது. அதனால் தான் செய்தியாளர் சந்திப்பின்பேது பாஜக தான் 4.5 ஆண்டு கால ஆட்சியை காப்பாற்றியது என்று சொன்னார். தற்போது பாஜக, செங்கோட்டையன் அதிமுக, டிடிவி தினகரன், சசிகலா, ஒபிஎஸ் என எல்லோரும் ஒன்றிணைந்துவிட்டனர். அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமியை தூக்கி போட்டுவிடுவார்கள். செங்கோட்டையன் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை போன்று நம்பகத்தன்மை இல்லாத நபர் இந்த உலகத்திலேயே கிடையாது என்று சொல்கிறார்.

கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் அதிமுக வெளியேறியதால், எடப்பாடி பழனிசாமியை பாஜக நம்பகத் தன்மையான தலைவராக ஏற்றுகொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் காலில் விழுந்தாலும் அவர் அதிமுக பொதுச் செயலாளராக இருக்க முடியாது. அவருடைய அரசியல் வாழ்க்கை அதிகாரப்பூர்வமாக முடியபோகிறது. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போகிறார்கள். இரட்டை இலை சின்னம் எடப்பாடியிடம் இருந்து  போக போகிறது. அந்த சின்னத்தை செங்கோட்டையன் பெறப் போகிறார்.  நிச்சயமாக வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி கையை விட்டு இரட்டை இலை சின்னம் போய்விடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ