spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: ராமதாஸ் பேசுவது அபத்தம்... மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி!

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: ராமதாஸ் பேசுவது அபத்தம்… மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி!

-

- Advertisement -

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமையே தவிர மாநில அரசின் கடமை அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். மேலும், பாமக இழந்த தனது வாக்கு வங்கியை அதிகரிக்கவே வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவமதிப்பு செய்துவிட்டதாக கூறி, பாமகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் மணிமண்ட திறப்பு விழாவில் பங்கேற்க வரும் முதலமைச்சருக்கு எதிராக போராட்டமும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இடஒதுக்கீடு மற்றும் பாமகவின் போராட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், பிரபல யூடியூப் நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது:-

சமூக நீதிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என கூறுவது அபத்தம். நாம் 69 சதவிகித இடஒதுக்கீட்டில் எந்த காலத்திலும் இருந்துள்ளோம். 1980-களில் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். வருமானவரி சார்ந்த இடஒதுக்கீட்டை கொண்டு வந்தபோது மிகப்பெரிய எதிர்ப்பு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.க. சட்டநகலை எரித்து சாம்பலை கோட்டைக்கு அனுப்பும் போராட்டத்தை அனுப்பியது. அதற்கு அமைச்சர் நாவலர் அனுப்பட்டும் சாம்பலை, அதனை பூச்செடிகளுக்கு உரமாக இடுவோம் என பதில் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1980 மக்களவை தேர்தலில் கலைஞர் – இந்திரகாந்தி கூட்டணி அமைந்ததது. இதனால் எம்.ஜி.ஆர். ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 27 சதவீதத்தில் இருந்து 50ஆக உயர்த்தினார். ஏற்கனவே பட்டியல் சமுகத்தினருக்கு 18 சதவீதம் இருந்தது. பின்னர் கலைஞர் ஒரு சதவிகித இடஒதுக்கீடு வழங்கினார். பின்னர் ஜெயலலிதா அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர்; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

1987ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இடஒதுக்கீடு போராட்டத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர். வன்னியர் சங்கம் நடத்திய அந்த போராட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் 1989ல் தான் அவர் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். அதனால் அவர் விழுப்புரத்தில் நாளை நடைபெற உள்ள இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு மண்டபத்தில் பங்கேற்க வேண்டியது அவரது கடமையாகும். போராட்டத் தியாகிகளுக்கு பின்னர் வந்த அரசுகள் உரிய அங்கிகாரம் வழங்கின. கலைஞர் பல்வேறு சாதிகளை இணைத்து தொகுப்பாக 20 சதவிகித இட ஒதுக்கீட்டினை வழங்கினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களில் முடிவெடுத்து 10.5 சதவிகித இடஒதுக்கீட்டினை வழங்கினார். ஆனால் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, எந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் உள்இடஓதுக்கீடு வழங்கப்பட்டது என கூறி நீதிமன்றம் தடை விதித்தது.

ராமதாஸ் - ஸ்டாலின்

தெலுங்கானா, பீகார் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது போல, தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக  வலியுறுத்தியுள்ளது. ஆனால் மத்திய அரசு எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் முழுமையான தகவல்களை கொண்டிருக்கும். அனைத்து தரப்பு மக்களிடமும் நேரடியாக எடுக்கப்படுவதுடன், நீதிமன்றத்தால் ஏற்கப்படும். ஆனால் தெலுங்கானா, பிகார் அரசுகள் எடுத்தது சர்வே. சாம்பிள் அடிப்படையில் குறிப்பிட்ட அளவிலான மக்களிடம் எடுக்கப்படும் அந்த கணக்கெடுப்பு  நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் அவர்கள் தள்ளிப்போட்டு கொண்டிருக்கிறார்கள்.

shyam
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்

சமுக நீதி என்பது நீதிக்கட்சி காலம் தொட்டு திராவிட இயக்கத்தில் உள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியபோதே அவர்களது போராட்டம் முடிந்து விட்டது. 1987-ல் தொடங்கிய போராட்டம், 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியவுடன் முடிவுற்றது. 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பெரிய அளவில் அரசியல் வெற்றியை பெற வில்லை. அக்கட்சிக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இழப்பு ஏற்பட்டது. அதனால் இந்த கோரிக்கை தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் பா.ம.க.?

திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சித்தாந்தம் உள்ள கட்சிகள். இவற்றுக்கு என்று சிறப்பு வாக்கு வங்கி கிடையாது. ஆனால் பாமக, விசிக போன்ற கட்சிகள் சிறப்பு வாக்கு வங்கி கொண்ட கட்சிகள். இந்த கட்சிகளுக்கு குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் தான் ஓட்டு போடுவார்கள். மற்றவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள். ஆனால் தங்களது தேவைகள் நிறைவு பெற்றால் இந்த காட்சிகளுக்கு வாக்கு வங்கி பெரிய அளவில் தேயும். ஆனால், திமுக, அதிமுகவுக்கு தேய்மானம் குறைந்த அளவில் தான் இருக்கும். தென் மாவட்டங்களில் செல்வாக்குடன் இருந்த கிருஷ்ணசாமிக்கு, திருமாவளவனின் வரவால் வாக்கு சதவீதம் குறைந்தது. எனவே அவர் முடிந்து போன மாஞ்சோலை பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்தார்.

விஜயகாந்த், ஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றபோது பாமகவின் செல்வாக்கு குறைந்தது. தற்போது விஜய் விழுப்புரத்தில் மாநாடு நடத்தியுள்ளது, இளைஞர் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் காலத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துகொள்ள வேண்டியது அவசியம். 1989ல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கட்சியை தொடங்கியபோது, தனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என கூறினார். ஆனால் காலத்திற்கு ஏற்ப எல்லாமே மாறும். அதனால் பாமக இடஒதுக்கீடு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. மேலும், விழுப்புரத்தில் நடைபெறும் மணி மண்டப திறப்பு விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கா விட்டால் போராட்டம் நடத்துவோம் என பாமக அறிவித்துள்ளது அரசியல். அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பதை யாராலும் தடுக்க முடியாது. பாமக குறைந்துள்ள தனது வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. போராட்டம் என ஆவேசமாக பேசினால் இளைஞர்களை ஈர்க்க முடியும் என்பதாலேயே இதனை அறிவித்துள்ளதாகவே பார்க்கிறேன். போராட்டத்தில் இளைஞர்களை பங்கேற்க செய்வதன் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்துவதற்காகவே இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ