spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் கூட்டணி? ஆளனுப்பும் காங்கிரஸ்! மணி சொன்ன சீக்ரெட்ஸ்!

விஜய் கூட்டணி? ஆளனுப்பும் காங்கிரஸ்! மணி சொன்ன சீக்ரெட்ஸ்!

-

- Advertisement -

திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை கூட்டணி. எனவே காங்கிரஸ் மேலிடம் திமுக உடனான கூட்டணி முறிக்க ஒருபோதும் விரும்பாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் தேர்தல் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அதன் காரணமாக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்படும் தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் தேர்தலில் காங்கிரஸ் கடுமையான சரிவை சந்தித்து இருக்கும் சூழலில், தமிழ்நாட்டிலும் அவர்களுக்கான இடங்களை திமுக குறைக்க வேண்டும் என்கிற இணைய தளங்களில் விவாதம் நடைபெறுகிறது. பீகார் அளவுகோள் தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. தமிழ்நாட்டில் காங்கிரசை நம்பிதான் திமுக இருக்கிறது. அதேபோல் திமுகவை நம்பிதான் காங்கிரசும் உள்ளது. திமுக இல்லாவிட்டால் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் பூஜியம். காங்கிரஸ் இல்லாமல் திமுக 60 -70 இடங்களில் வெற்றி பெறலாம். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரசுக்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ளது.

திமுக தனித்து போட்டியிட்டு வென்றது 1989 தேர்தலில் மட்டும்தான். எனவே காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது. காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் இழப்பதற்கு எதுவும் இல்லை. கடந்த 60 வருடங்களாக அவர்கள் ஆட்சியில் இல்லை. இன்னும் 5 வருடங்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. ஆனால், திமுகவுக்கு இழப்பதற்கு ஆட்சி உள்ளது. எனவே இணையத்தில் காங்கிரசை விமர்சித்து, திமுக ஆதரவாளர்கள் எழுதுவது என்பது, அரசியல் புரிதல் இல்லாமல் செய்தாகதான் அர்த்தம்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லாவிட்டால், அக்கட்சியின் மீதான நம்பத்தன்மை அதள பாதாளத்திற்கு போய்விடும். சிறுபான்மை மக்களின் வாக்கு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதால் திமுகவுக்கு செல்கிறது. ஒருவேளை காங்கிரசை கூட்டணியில்  இருந்து வெளியேற்றினால், திமுக பாஜக கூட்டணிக்கு செல்வதற்காக காங்கிரசை வெளியேற்றியதாக நினைப்பார்கள்.  காங்கிரஸ் இல்லாமல் திமுக எதிர்க்கட்சியாக தான் வர முடியும். அவர்கள் இல்லாமல் ஒருபோதும் திமுகவால் ஆட்சியை தக்க வைக்க முடியாது. அதேவேளையில் காங்கிரஸ் குழுவை அனுப்பி விஜயுடன் கூட்டணி பேசுவதும், அதுகுறித்த தகவல்களை கசிய விடுவதும் உண்மைதான். அதற்கு காரணம் திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை பெறுவதற்காக தான். சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு, திமுக தலைவர் ஸ்டாலினுடன் நல்ல நட்பு உள்ளது. அதை அவர்கள் ஒருபோதும் இழக்க மாட்டார்கள்.

விஜய் போன்ற ஒரு பரிசோதிக்கப்படாத அரசியல் கட்சியுடன் அவர்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டார்கள்.  பீகார் சட்டமன்றத்தேர்தல் தோல்வி எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. 2029 மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு 10 இடங்கள் வேணடும். அதற்கு காங்கிரசுக்கு, திமுக உறுதி அளித்துள்ளது. அதேபோல் செய்வார்கள். தமிழ்நாட்டில் அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸ் கேட்காது. கூடுதலாக இடங்களை கேட்பார்கள். அதை இம்முறை கொடுக்க ஸ்டாலின் ஒப்புக் கொண்டுள்ளார். அதிகபட்சம் 35 இடங்கள் வரை கொடுப்பதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அதிகாரத்தில் பங்கு என்பதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

விமர்சனங்களை எல்லாம் தாண்டி, திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை கூட்டணியாகும். பாஜக எதிர்ப்பிலும், மதவாதத்திற்கு எதிராகவும் இருவரும் ஒன்றாக நிற்கிறார்கள். மற்றொரு புறம் திமுகவின் 32 எம்.பிக்கள் தேசிய அரசியல் செய்வதற்கு காங்கிரசுக்கு தேவையாகும். எனவே திமுக உடனான தங்களின் உறவை குறைத்துக் ஒருபோதும் கெடுத்துக் கொள்ளாது. அதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்நிலையில் காங்கிரசில் ஒரு பிரிவு விஜய போக வேண்டும் என்று விரும்புவதும்,  கட்சியின் மேலிடத்தில் இருந்து அவரிடம் பேசுவதும் உண்மை. அது திமுகவுக்கு செக் வைப்பதற்காக தான். ஆனால் ஒருபோதும் அவர்கள் திமுகவை விட்டு போக மாட்டார்கள். அது ஒரு பேரழிவாக அமைந்துவிடும். அப்போது திமுகவால் ஆட்சியை தக்க வைக்க முடியாது. இது திமுக தலைமைக்கு நன்றாகவே தெரியும். அவர் காங்கிரசை இழக்கவே மாட்டார். காங்கிரஸ் மேலிடமும் திமுகவை இழக்க மாட்டார்கள்.

வானதி சீனிவாசன், பீகாருக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு என்று சொல்கிறார். அவர் கூற்றுபடி  பீகாரில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற்று இருக்கிறது. அதேபோல் இங்கும் ஆளுங்கட்சியான திமுக தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. அதேவேளையில் பிகார் தேர்தலுக்கு பிறகு மோடி, அமித்ஷாவின் உக்கிரப் பார்வை, தமிழ்நாட்டின் பக்கம் திரும்பும் என்று சொல்லலாம். பீகார் தேர்தல் வெற்றி என்பது அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஒரு பூஸ்ட் போன்றதாகும். சிறிய சிறிய கட்சிகள் எல்லாம், தற்போது என்.டி.ஏ கூட்டணியை நோக்கி நகர்வார்கள். பாமக,தேமுதிக உள்ளிட்ட 2019ல் இடம்பெற்ற கட்சிகள் எல்லாம் சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ