மதுரை: சூடு அதிகமாக இருக்கும் திசை சூலம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். எந்த நாளில் என்ன திசையில் பயணிக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சூலம் என்று குறிப்பிடப்பட்ட திசையில் திசையில் பயணம் செய்தே ஆகவேண்டும் என்றால் அதற்கான பரிகாரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சூரியன், சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் அன்று மேற்கே சூலம் என்றும், சந்திரன், சனி ஆகியோரின் திசை மேற்கு என்பதால் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் என்றும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அலுவல் பணியாகவோ, தொழில்முறையிலோ அடிக்கடி பிரயாணம் செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சூலம் குறிப்பிட்டுள்ள திசையில் பயணம் செய்ய வேண்டும் என்றால், கிழக்கு திசைக்கு தயிர், மேற்கிற்கு வெல்லம், வடக்கிற்கு பசும்பால், தெற்கிற்கு நல்லெண்ணெய் சேர்த்த ஏதேனும் ஒரு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்ற விதி விலக்கும் இருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் பிரயாணம் செய்யும்போது அவசியம் சூலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். சூடு அதிகமாக இருக்கும் திசையில் பயணிக்கும்போது வயிற்றில் உள்ள குழந்தைக்கும், அந்தக் குழந்தையை சுமக்கும் தாய்க்கும் உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் சூலம் என்று குறிப்பிட்டிருக்கும் திசையில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.
கட்டாயம் பயணித்தே ஆக வேண்டும் என்று சொல்பவர்கள் பரிகாரமாக அன்றைய தினம் பகல்12 மணிக்கு மேல் பால் அல்லது தயிர் சாப்பிட்டுவிட்டு பயணிக்கலாம் என்றும் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.