spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சி

-

- Advertisement -

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சிதிருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நால்ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நுழைவாயிலில் கனரக லாரி மோதியதில் இடது புறம் தூண் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் விழும் அபாயம் .

சக்தி ஸ்தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது . இக்கோயிலுக்கு திருச்சி மட்டுமல்லாத தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

மேலும் ஆடி மாதத்தை பொறுத்தவரை ஆடி வெள்ளி ஆடி பதினெட்டு போன்ற முக்கிய திரு நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

ஆடிப்பெருக்கு- கோவை பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

we-r-hiring

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சமயபுரம் திருக்கோவிலுக்கு சொந்தமான நுழைவு வாயில் இடதுபுற கட்டையில்  லாரி மோதியுள்ளது . இதனால் அக்கட்டை விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது.

இதனால் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ