spot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்

திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்

-

- Advertisement -

ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதியில் சர்வதரிசனத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது . சர்வ தரிசனம் கான ஆதார் அட்டையை காண்பித்து பக்தர்கள் தரிசிக்கலாம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.

 

we-r-hiring

மார்ச் 1-ம் தேதி முதல் சர்வதரிசனம் செய்ய வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 2- ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்படும். அது போன்று தங்கும் அரைக்கும் பக்தரின் முகத்தை ஸ்கேன் செய்து அறையை ஒதுக்க உள்ளனர். இப்படி செய்வதன் மூலம் அதிகமாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் கட்டுப்படுத்த முடியும். தங்கும் அறைக்கான டெபாசிட் திரும்ப வழங்குவதிலும் எவ்வித தவறுகளும் நேர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்த புதிய முறை வெற்றிகரமாக அமைந்தால் இனிவரும் நாட்களில் பக்தர்கள் யாரும் எவ்வித டோக்கன்களும் பெறாமலேயே நேராக திருமலையில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த புதிய முறையின் மூலம் திருப்பதி கோவிலில் அளவுக்கு அதிகமாக லட்டுகள் வாங்கும் மக்களை தடுக்கவும் இந்த புதிய தொழில்நுட்பம்  பயன்படும். தரிசனம் செய்ய உள்ளே செல்லும்போதே முகத்தை ஸ்கேன் செய்து கொள்ளும் கருவி ஒரு முகத்துக்கு ஒரு லட்டு என்ற விகிதத்தில் மட்டுமே விநியோகம் செய்ய உள்ளது. இந்த புதிய நடைமுறை வெற்றிகரமாக அமைந்தால் இனிவரும் நாட்களில் பக்தர்கள் யாரும் எவ்வித டோக்கன்களும் பெறாமலேயே திருமலையில் சுவாமி தரிசனம் செய்யலாம் மற்றும் அளவுக்கு அதிகமாக லட்டுகள் வாங்கும் மக்களை தடுக்கவும்  தேவஸ்தான அதிகாரிகள் மார்ச் 1 முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த உள்ளனர்.

MUST READ