Homeசெய்திகள்ஆன்மீகம்திருப்பதி கோயில் இலவச தரிசனம்

திருப்பதி கோயில் இலவச தரிசனம்

-

 

திருப்பதி கோயிலில் மே 24 காலை வரை இலவச தரிசனம் அனுமதி இல்லை

சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (மே 19)  கூட்டம் அதிகரித்து காணப்பட்டதினால்  பக்தர்கள்  தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததினால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தானம் அதிகாரிகள் அறிவித்தனர்.

கோடைகால விடுமுறை என்பதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

டிக்கெட் இல்லாமல் நேரடியாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முப்பது மணி நேரம்மும் , ரூ.300  டிக்கெட் பெற்ற பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இலவச நேரம் ஒதுக்கீடு பெற்றவர்கள் ஏழு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இனி வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் திருப்பதி ஏழு மலையான் கோயிலில் நாளை மே 24 காலை வரை  இலவச தரிசனம் அனுமதி கிடையாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் நிலையில் அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருக்கின்றனர்.

MUST READ