spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 3 பேருக்கு போலீஸார் வலை வீச்சு!!!

ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 3 பேருக்கு போலீஸார் வலை வீச்சு!!!

-

- Advertisement -

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது. இது தொடர்பாக மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆவடி காமராஜ் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகரன்(55).இவருக்கு சொந்தமான இடம் சேக்காடு பகுதியில் உள்ளது.இந்த நிலத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.அத்துடன் அந்த இடம் சம்பந்தமாக திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து ராஜசேகரன் அவரது இடத்திற்கான வில்லங்க சான்று பெற்று பார்த்தபோது,அவரது இடம் வேறு 2 பேருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகரன் இது குறித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு சொந்தமான அந்த இடத்தை ஆவடி அடுத்த சேக்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களான சரத்குமார்,இன்பகுமார், பூஞ்சோலை ஆகிய 4 பேரும் சேர்ந்து ராஜசேகரன் பெயரில் தயாரித்து 2 நபர்களுக்கு இடத்தைப் பிரித்து ரூபாய் 15 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தவர் கைது

we-r-hiring

இது குறித்து ராஜசேகரன் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதன் பேரில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆவடி அடுத்த சேக்காடு மெயின் ரோடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பூஞ்சோலை என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், ராஜசேகரன் இடத்தை 4 பேரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பூஞ்சோலை மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மேலும் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய் 1 கோடி என்று கூறப்படுகிறது.

MUST READ