- Advertisement -
ஆவடி பணிமனையில் இருந்து கோயம்பேடு வரை செல்லும் அரசு பேருந்தில் ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமியின் படம் வைக்கப்பட்டுள்ளதை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


அரசு பேருந்தில் தற்போதைய முதலமைச்சர் படமோ அல்லது முன்னாள் முதலமைச்சர்கள் படமோ வைப்பதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். அதிமுக ஆட்சி முடிவடைந்து 2 ஆண்டு காலமாகிறது. ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படம் போட்ட காலண்டர் வைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். பேருந்து எண் AMJ 0076 TN-01 N-9941 ஓட்டிய ஒட்டுநர் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


