spot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் ஹெல்மெட் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - இருவர் கைது

ஆவடியில் ஹெல்மெட் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது

-

- Advertisement -

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு அதீத கஞ்சா போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கைது.

we-r-hiring

பீகாரை சேர்ந்த ராஜ் குமார் சிங் என்பவர் திருமுல்லைவாயில் சி.டி.எச் சாலை ஓரம் ஹெல்மெட் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஹெல்மெட் எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு பணம் தராமல் அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்துள்ளனர். அவர்கள் எடுத்த ஹெல்மெட்க்கு ராஜ்குமார் சிங் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு எங்க வந்து யார்கிட்ட பணம் கேட்கிறாய்? நீ வேண்டும் என்றால் எனக்கு மாமூல் கொடு எனக் கூறி மறைத்து வைத்து இருந்த பட்டாகத்தியை எடுத்து ராஜ்குமார் சிங்கை தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராஜ்குமார் உடனடியாக அருகில் உள்ள திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெட்டு காயத்துடன் இருந்த நபரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜ்குமார் சிங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் தனிப்படை போலீசார் பட்டாகத்திகளைக் கொண்டு தாக்கியவர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு வலை வீசி தேடினர். அப்போது அவர்கள் ஆவடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் ஆவடி பகுதியை சேர்ந்த டாட்டு சதீஷ் மற்றும் ராகேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அவர்கள் இருவரும் கஞ்சா போதையில் இருப்பதால் முன்னுக்கு பின் முரணாக நடந்து கொண்டனர். அதனால் அவர்களிடம் முறையான வாக்கு மூலம் பெற முடியாமல் போலீசார் திணரினர்.

இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியுடன் வளம் வந்து பட்டப்பகலில் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் ஆவடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ