Homeசெய்திகள்ஆவடிஅயப்பாக்கம், சோழவரம், வெள்ளவேட்டில் தற்காலிக காவல் நிலையம் திறப்பு

அயப்பாக்கம், சோழவரம், வெள்ளவேட்டில் தற்காலிக காவல் நிலையம் திறப்பு

-

ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட சோழவரம், வெள்ளவேடு, திருமுல்லைவாயில், ஆகிய காவல் நிலையங்கள் உள்ள எல்லைகளில் ஆட்டம் தாங்கள், திருமழிசை அருகே உள்ள பாப்பான் சத்திரம் மற்றும் அயப்பாக்கம் ஆகிய நகரங்களில் மக்கள் தொகை அதிக அளவில் இருப்பதோடு அப்பகுதி மக்கள் காவல் நிலையங்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

ஆவடி காவல் ஆணையரகம்

அதனால் அந்த 3 நகரங்களிலும் தற்காலிக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன இவற்றை வெள்ளிக்கிழமை ஆவடி காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர்  திறந்து வைத்து அவைகளின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து காவல் ஆணையர் கூறும்போது, குற்றச் செயல்களை விரைந்து தடுப்பதற்காகவும், சில இடங்களில் வாகன சோதனைகளை நடத்தவும் இந்த மூன்று தற்காலிக புற காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 24 மணி நேரமும் செயல்படும் இந்த காவல் நிலையங்களில் தலா இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் பணியில் இருப்பர்கள் என்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு ரசீது வழங்கி விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.

ஆவடி காவல் ஆணையரகம் எல்லைகளில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார்கள் வாகன சோதனைகளில் ஈடுபடும் வகையில் 7 ஒருங்கிணைந்த சோதனை சாவடிகள் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் தெரிவித்தார்

MUST READ