spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஓடும் ரயிலில் சாகசம்; தூக்கியெறியப்பட்ட மாணவன்; பெற்றோர்கள் வேதனை

ஓடும் ரயிலில் சாகசம்; தூக்கியெறியப்பட்ட மாணவன்; பெற்றோர்கள் வேதனை

-

- Advertisement -

சென்னையில் ஓடும் ரயிலில் சாகசம் செய்து மாணவன், மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்பட்ட சம்பவம் பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்(16). இவர் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார்.

we-r-hiring

இந்த நிலையில், கடந்த 9 ம் தேதி மதியம் கல்லூரியை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் சென்றுள்ளார். சுமார் 12: 20 மணியளவில் ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே சென்று கொண்டிருக்கும் ரயிலில் தொங்கியபடி சாகசம் செய்துள்ளார்.

அப்போது மின் கம்பத்தில் அடிப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார். உடன் சென்ற நண்பர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி சம்பவ இடத்திற்கு வந்த பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அபிலாஷ் சுய நினைவின்றி கிடந்துள்ளார்.

பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தூக்கிசென்றுள்ளனர். அங்கு அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்துள்ளனர்.

அபிலாஷ் ரயிலில் ஏறி பயணம் செய்யும்போது சாகசத்தில் ஈடுபட்டதும் பின், மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்படும் வீடியோ காட்சியானது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ராயபுரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ