ரிப்பன் மாளிகை அருகே 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தை ஒட்டி ரிப்பன் மாளிகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை பின்புறம் தூய்மை பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணய சட்டத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை சென்னை மாநகராட்சி இதுவரை அமல்படுத்தாததை கண்டித்து இரண்டாவது நாளாக தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
ஏற்கெனவே தனியார் மயத்தை கைவிட வலுயுறுத்தியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் கடந்த மாதம் 13 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கோரிக்கை நிறைவேறாததால் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். நேற்று கொருக்குப்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இன்று இரண்டாவது நாளாக மாநகராட்சி அலுவலகம் பின்புறமாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட 13 தூய்மை பணியாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.
ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் கதை இதுதான்…. இவங்களும் நடிக்கிறாங்களா?



