ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பண்டிகை காலங்கள் மற்றும் விழாக்கள் போன்ற நேரங்களில் மக்கள் தொடா் விடுமுறை கிடைப்பதால் அவரவர் ஊருக்கு பேருந்தில் செயல் படையெடுப்பாா்கள். இதனால் பேருந்துகள் முன்கூட்டியே ரிசா்வ் செய்யப்படும். பேருந்துகளில் கூட்டம் அலைபோதும். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, மிலாது நபி, ஓணம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஊருக்கு செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மிலாது நபி, ஓணம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு சிறப்பு குழுக்கள் அமைத்து சோதனை மேற்க்கொள்ளப்படும்.
மேலும், அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பேருந்துகளை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
நிர்மலா முதல்வர் வேட்பாளர்! ஆப்படித்த அண்ணாமலை! வெளியேறிய டிடிவி தினகரன்! உமாபதி பேட்டி!
