spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது – உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்

மூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது – உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்

-

- Advertisement -

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது - உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்உளுந்தூர் பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு மூன்றாவது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகளை நிராகரித்துள்ளாா் நீதிபதி. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரஞ்சிதா வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.

மேலும், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது.  மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பா. ரஞ்சித் தயாரிக்கும் ‘தண்டகாரண்யம்’ படத்தின் டிரைலர் அப்டேட்!

we-r-hiring

 

MUST READ