பா. ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அடுத்தது இவர், ‘வேட்டுவம்’, ‘சார்பட்டா பரம்பரை 2’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்த இவர், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் தண்டகாரண்யம் படத்தை தயாரித்துள்ளார் பா. ரஞ்சித். இந்த படத்தை அதியன் ஆதிரை எழுதி இயக்கியுள்ளார். படத்தில் ரித்விகா, சபீர் கல்லாரக்கல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், பிரதீப் காளிராஜா இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளனர். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது இன்று (செப்டம்பர் 5) திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ள ‘மதராஸி’ படத்திற்கு முன் ‘தண்டகாரண்யம்’ பட ட்ரெய்லர் ஒளிபரப்பப்படுகிறது. இதனை படக்குழுவும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- Advertisement -