தனியார் குடியிருப்பில் தண்ணீர் திறக்க மறுத்ததாக கொடுத்த 100 Calls தகவலின் பெயரில் விசாரணைக்கு சென்ற காவலர் மீது தாக்குதல்.முகப்பேர் ஏரி திட்டம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் உமாதேவி வயது 48. இவரது வீட்டிற்கு வரும் தண்ணீர் இணைப்பை குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த் துண்டித்துவிட்டதாக, இரவு 11:45 மணிக்கு அவசர எண் 100க்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், நொளம்பூர் காவல் நிலைய ரோந்து போலீசார் அங்கு சென்றனர். பெண் காவலர், மஞ்சு மற்றும் வாகன ஓட்டுநர் காவலர் பாலாஜி சம்பவ இடம் சென்ற போது, அங்கு மது போதையில் இருந்த வெங்கடேஷ், செல்லப்பா, ஆனந்த் ஆகிய மூவரும் சேர்ந்து உமா தேவியின் கணவர் சரவணன் என்பவரிடம் வாக்குவாதம் செய்து அவரை அடித்தனர்.
காவலர் பாலாஜி இருவரையும் விலக்கிவிட்டு தடுக்க முயலும் போது செல்லப்பா என்பவர் அசிங்கமான வார்த்தைகளால் காவலரை பேசியதுடன் அவரை இடது கன்னத்தில் தாக்கியுள்ளார். அருகில் இருந்த வெங்கடேஷ் காவலர் பாலாஜியை இரண்டு முறை இடது கன்னத்தில் தாக்கியுள்ளார், இந்த சம்பவத்தை பெண் காவலர் மஞ்சு என்பவர் அவருடைய செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். காயம் பட்ட காவலர் பாலாஜி என்பவர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்துள்ளார். காவலரை தாக்கிய வெங்கடேஷ், செல்லப்பா இருவரும் கே எம் சி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
