spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

-

- Advertisement -

 சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட 2025 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் 2025 சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் 3718 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

we-r-hiring

அதிகபட்சமாக பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்ட மன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, ஏற்கனவே 29.10.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,41,271 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,09,975 இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 1,252 மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39,52,498 ஆகும்.

நடைபெற்று முடிந்த சிறப்பு சுருக்க முறை 2025 திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 19,70,279 ஆண் வாக்காளர்கள், 20,44,323 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,276 இதர வாக்காளர்கள் என மொத்தம் 40,15,878 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மேலும் 44,974 ஆண் வாக்காளர்கள், 51,168 பெண் வாக்காளர்கள் மற்றும் 42 இதர வாக்காளர்கள் என மொத்தம் 96,184 வாக்காளர்களின் பெயர்கள் புதியதாக பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 15,966 ஆண் வாக்காளர்கள், 16,820 பெண் வாக்காளர்கள் மற்றும் 18 இதர வாக்காளர்கள் என் மொத்தம் 32,804 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் 3 நாள் போலீஸ் கஸ்டடி 

 

 

MUST READ