spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ரசித்தனர்

சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ரசித்தனர்

-

- Advertisement -

சென்னையில் கடந்த 2 தேதி தொடங்கப்பட்ட மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் நான்காவது  மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ரசித்தனர்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் கடந்த 2 தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நான்காவது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

we-r-hiring

இந்த மலர் கண்காட்சியில் பட்டாம் பூச்சி, படகு, மயில், கார், பறவை, ஊட்டி மலை ரயில், யானை, பொம்மைகள் ஆகிய வடிவங்கலில் குழந்தைகளை கவரும் வகையில் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல வண்ணங்களில் மலர்களை கண்டு ரசித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மலர் கண்காட்சியை கடந்த 16ம் தேதி வரை சுமார் 1,00,224 பேர் பார்வையிட்டுள்ளனர்.நேற்று 19 தேதியோடு மலர்கண்காட்சி நிறைவு பெற்றது. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கண்டு ரசித்ததாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபலங்களின் ‘நெக்ஸ்ட் லெவல்’ ட்வீட்….. ஓ இதுதான் விஷயமா?

MUST READ