spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது குழந்தை பலி

மெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது குழந்தை பலி

-

- Advertisement -

மெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது குழந்தை பலி

பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் தஞ்சாவூரில் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று தனது குடும்பத்தினர் ஆறு நபர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.

MKS

சரியாக 3.15 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் தனது குடும்பத்தினரோடு குளித்துவிட்டு மேலே ஏறியுள்ளனர். பின்னர், தனது நான்கு வயது ஆண் குழந்தையான அனிருத் கிருஷ்ணன் மட்டும் காணாமல் போனதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து நீச்சல் குளம் சென்று பார்த்த போது அங்கு நீச்சல் குளத்தின் அடியில் மயக்க நிலையில் குழந்தை கிடந்துள்ளார்.

we-r-hiring

உடனடியாக அவரை மீட்டு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு குழந்தை நீச்சல் குளத்திலேயே மூச்சு திணறி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அனிருத் என் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.கஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பராமரிப்பு காரணங்களுக்காக மறு உத்தரவு ஒருவரை நீச்சல் குளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ