Homeசெய்திகள்சென்னை40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை... நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!

40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை… நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!

-

- Advertisement -

ஆட்டோவில் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகள் மற்றும் டேப் ஆகியவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை காவல்துறை ஆணையர் அருண் பாராட்டு.40 சவரன்: நகை ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை...  நேரில் அழைத்து பாராட்டிய காவல்துரை ஆணையர்..!ஹைதராபாத்தைச் சேர்ந்த நித்திஷ் (39) என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடக்கவிருந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு  சென்னை வந்துள்ளார்.சென்னை வந்த அவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்கு விடுதியில் அறை புக் செய்துள்ளார். பின்பு ஆட்டோ மூலமாக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுள்ளார்.

செல்லும்பொழுது 40 சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த டேப் ஆகியவற்றை பையில் வைத்து ஆட்டோ பின்புறம் வைத்த நிலையில் மறதியாக ஆட்டோவில் இருந்து இறங்கி விடுதிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநரான மேற்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (40) என்பவர் சிறிது தூரம் சென்ற நிலையில் ஆட்டோவின் பின்புறம்  கவனித்தபோது, அதில் பை இருப்பது தெரிய வந்தது.

அதனை திறந்து பார்த்தபோது நகைகள் மற்றும் விலை உயர்ந்த டேப் ஆகியவை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு சென்று பையை ஒப்படைத்து சம்பவத்தை விவரித்துள்ளார். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிட்ட விடுதிக்கு சென்ற அண்ணா நகர் போலீசார், நித்திஷை காவல் நிலையம் அழைத்து வந்து அவரது பொருள்தான் என உறுதிப்படுத்தி பின் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த டேப் ஆகியவற்றை அவரிடம் ஒப்படைத்தனர். நேர்மையாக செயல்பட்டு நகைகள் மற்றும் விலை உயர்ந்த டேப்பை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் நேரில் அழைத்து சென்னை காவல்துறை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

MUST READ