Homeசெய்திகள்தமிழ்நாடு ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

தமிழ்நாடு ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

-

- Advertisement -

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை விவகாரத்தை கண்டித்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆளுநருக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெற்றது.

 

டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி மாதம் கொண்டாட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் உள்ள திராவிடநல் திருநாடு எனும் வரியை நீக்கி பாடப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 20,000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி உமாபதி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அஞ்சல் அட்டையில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்று எழுதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தமிழ்நாடு ஆளுநர்  உடனடியாக வெளியேற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தின் திராவிடநல் திருநாடு எனும் வார்த்தையை விட்டுவிட்டு பாடி உள்ளதாகவும், இதனை கண்டித்து தமிழ்நாடு முழுக்க இன்று திராவிடர் விடுதலை கழகம் சார்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் அனுப்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும் தமிழர்களின் உணர்வுகளையும் மதிக்காத ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

MUST READ