நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்
விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2021 ஆம் ஆம் ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற காரானது மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் ஃப்ர வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
வழக்கு விசாரணைக்கு மார்ச் 22 ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராகாததால் யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜரானார்.
ஒருவேளை யாஷிகா இன்று ஆஜராகவில்லை என்றால் அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.