Homeசெய்திகள்சென்னைவாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் - திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்

-

- Advertisement -

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் சந்தித்து மனு அளித்துள்ளாா்.வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் - திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்     சென்னை திருவிக நகர் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே4 ம் தேதி வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களை அனுமதிக்க கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தி மனு அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து, “தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை முகவர்களாக மற்ற கட்சியினர் நியமிக்க உள்ளதாகவும் அவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

we-r-hiring

மேலும் திருவள்ளுர் திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆட்கள் வரவழைக்கபட்டிருப்பதாகவும், தோல்வி பயத்தால் அவர்கள் சட்ட ஒழுங்கு பிரச்சணை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் அவர்களை அனுமதிக்க கூடாது எனவும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்ததாகவும் தலைமை தேர்தல் அதிகாரி அதை பரிசீலிப்பதாக வாக்குறுதி அளிப்பதாக தெரிவித்தார்.

சென்னை மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிக்ளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்….

MUST READ