Homeசெய்திகள்சென்னைஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…

ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…

-

- Advertisement -

சென்னையில் ஏப்ரல் 23 இல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…

we-r-hiring

தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கச் செல்லும் வகையில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை நகரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அரசின் சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை, அவர்கள் தங்கள் வாக்குரிமையை சுலபமாக பயன்படுத்த உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பயணிக்கும் போது, வயது சான்று அல்லது வாக்காளர் அடையாள அடைடையை காட்டினால், இலவசமாக பயணம் செய்யலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, தேர்தல் நாளில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்கவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வாக்களிக்க உறுதி செய்யவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சொத்து கணக்கில் முறைகேடு – ஒருவாரத்தில் பதிலளிக்க உயர்நீதி மன்றம்  கெடு…

MUST READ