விஜய் வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜயின் வேட்புமனுவில் சொத்துத் தகவல் முரண்பாடு குறித்து முக்கிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் ரூ.115.13 கோடி மதிப்பிலான சொத்து என தெரிவித்திருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ரூ.220 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு சொத்துத் தகவல் குறைத்து காட்டப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பெரம்பூர் வாக்காளர் விக்னேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைப்பது அல்லது முரண்படக் குறிப்பிடுவது முறைகேடாகும் எனக் குறிப்பிட்டது.
மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருவாரத்திற்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…
