spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதரைப்பால வெள்ளத்தில் சிக்கிய கார் : ஜேசிபி உதவியுடன் மீட்பு

தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய கார் : ஜேசிபி உதவியுடன் மீட்பு

-

- Advertisement -

மதுரவாயல் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஜேசிபி உதவியுடன் காரும் அதன் உரிமையாலும் மீட்கப்பட்டார்.

தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய கார் : ஜேசிபி உதவியுடன் மீட்புசென்னை, மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் கமைழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை முகப்பேரை சேர்ந்த சுனில் வர்க்கீஸ் (54) என்ற நபர் தனது சொகுசு காரில் ஆபத்தை உணராமல் தரைபாலத்தை கடக்க முயன்றார்.

we-r-hiring

தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய கார் : ஜேசிபி உதவியுடன் மீட்புஅப்போது வெள்ளத்தில் சிக்கிய கார் இழுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த தடுப்புகளில் சிக்கிக்கொண்டது. இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார் உயிருக்கு போராடிய கார் உரிமையாளரை காரின் கண்ணாடியை உடைத்து சினிமா பாணியில் மீட்டனர். அதைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் கயிறு கட்டி கரையும் மீட்டனர்.

மெட்ரோ ரயில் 2ஆம் கட்டம் திட்டம் : ரூ.168.16 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

தற்போது கார் ஓடும் வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் அந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளன. தரைப்பாலங்களில் வெள்ளம் சென்றால் ஆபத்தை உணராமல் அதை கடந்து செல்லக்கூடாது எனவும், அதையும் மீறி சென்றால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ