சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் அருண் செய்தியாளர் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளாா்.சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹுசைன் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்நது தொடர்பாக காவல் ஆணையர் அருண் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது, சென்னை அடையாறு பகுதிகளில் ஏழு இடங்களில் நகை பறிப்பு சம்பவத்தில் மூலையாக செயல்பட்ட கொள்ளையனை ரயில்வே போலீஸ் உதவியுடன் சென்னை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தொடர் செயின் பறிப்பு சம்பவங்களை தொடர்ந்து 100 சிசிடிவிக்கள் ஆய்வு செய்யப்பட்டது. பிடிபட்ட 3 குற்றவாளிகளும் ‘இரானி கொள்ளையர்கள்’ மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் திறமையானவர்கள். நகைகள், பைக்கை பறிமுதல் செய்ய சென்றபோது தப்பிக்க முயன்றதால் ஜாபரை சுட்டதாகக் கூறிய அவர், 26 சவரன் நகை, துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்துள்ளோம். பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என கூறினார்.