(செப்டம்பர் 8) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்நது உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் சவரனுக்கு ரூ.3080 அதிகரித்திருந்த தங்கம், இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது. கிராமிற்கு ரூ.35 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.79,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வணிகத்தில் வெள்ளி கிராம் ரூ.1 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.137-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில், ஒரு சவரன் தங்கம் ரூ.10,000 என்ற புதிய உச்சத்தை தொட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இந்த திடீர் விலை இறக்கம், நகை வாங்க திட்டமிட்டடிருந்தவர்களுக்கு ஓரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.