- Advertisement -
மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரி கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. கடந்த மிக்ஜாம் புயலின்போது பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கரை சேதம் அடைந்தது.


இந்த நிலையில், சேதம் அடைந்த செம்பரம்பாக்கம் ஏரி கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க தமிழ்நாடு நீர்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


