”சென்னை ஒன்று” ஒரே QR டிக்கெட்டில் அனைத்து பொதுப் போக்குவரத்து செயலியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.
தமிழக அரசின் புதிய முயற்சியாக, அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் “சென்னை ஒன்று” (Chennai One)iOS மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய செல்போன் செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சென்னையில் ஒரே ஒரு டிக்கெட் மூலமாக ஆபிஸ், பள்ளி, கால்லூரி பஸ், ரயில் என மாறி மாறி செல்பவர்களின் பயணத்த சுலபமாக்க அனைத்து பொதுப் போக்குவரத்துகளையும் இணைக்கும் வகையில் ஒரே QR பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுதியிருக்கிறது தழிழக அரசு. இனி ஒரே டிக்கட்டில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், ஒரே QR கோடு மூலம் ஒருங்கிணைக்கும் செயலியை பயன்படுத்திக்கொண்டு எந்த வழித்தடத்தில் எந்தெந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தப்போகிறோம் எனக் குறிப்பிட்டு QR CODE டிக்கட்டை பெறலாம்.
நாட்டிலேயே முதன்முறையாக அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் ஒரே செயலியில் இணைக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தரப்பினரும் எளிதில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
இதன் மூலம் ஒரே பயணப் பதிவின் மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான அனைத்து போக்குவரத்து முறைகளிலும் சுலபமாகவும் விரைவாகவும் பயணம் செய்ய முடியும்.