Homeசெய்திகள்சென்னை#Breaking:சென்னை புறநகர் ரயில்கள் சிக்னல் கோளாறால் தாமதம் - 1 மணி நேரமாக பயணிகள்...

#Breaking:சென்னை புறநகர் ரயில்கள் சிக்னல் கோளாறால் தாமதம் – 1 மணி நேரமாக பயணிகள் அவதி

-

- Advertisement -

சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர் .அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கம் செல்லும் ரயில்கள் வராததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. புறநகர் ரயில்கள் தாமதத்தால் பணி முடிந்து வீடு திரும்பும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். புறநகர் ரயில்கள் தாமதம் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் செண்ட்ரல் ஆவடி, திருவள்ளூர் வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தாமதம் ஏற்பட்டுள்ளதால் வெறுத்துப்போன மக்கள், ”தமிழர்களின் வரிப்பணத்தை எல்லாம் வட இந்தியாவில் கொட்டிக்கொண்டு இருக்கிறது பாஜக அரசு. அதில் கொஞ்சம் கூட இங்கே செலவு செய்து ரயில் வசதிகளை பெருக்கலாமே? தமிழர்களை கொடுமைப்படுத்தி பார்க்க பாஜகவுக்கு அவ்ளோ வெறி போல” என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

 

 

MUST READ