spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

சென்னையில் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

-

- Advertisement -

தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி 11 மாத குழந்தை பலியாகியுள்ளது.

தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

we-r-hiring

சேலையூர், மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (27) – உமாதேவி (26) தம்பதியினர். இவர்களுக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை இருந்தது.

நேற்று இரவு வீட்டில் காத்து வரவில்லை என வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குழந்தையுடன் தரையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 1:30 மணிக்கு குழந்தை அருகில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தவர்கள் குழந்தையை தேடிய போது வீட்டின் வாசலில் இருந்த பக்கெட் தண்ணீரில் குழந்தை மூழ்கி கிடந்துள்ளது.

பின்னர் குழந்தையை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ