spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் பியூட்டி பார்லர் உரிமையாளர்களுக்கு இடையே மோதல்

சென்னையில் பியூட்டி பார்லர் உரிமையாளர்களுக்கு இடையே மோதல்

-

- Advertisement -

சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தும் உரிமையாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டி. கடைக்குள் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு முற்றியது.கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய உரிமையாளர்  உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். 

சென்னையில் பியூட்டி பார்லர் உரிமையாளர்களுக்கு இடையே மோதல்

we-r-hiring

ஒரு தொழில் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றால் அதே தொழிலை பலர் தொடங்கி நடத்துவது வாடிக்கையான ஒன்று. அப்படி ஒரே தொழிலை பலர் தொடங்கினால் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க விலை குறைப்பு, சிறப்பு சலுகை எனக் கூறி வியாபாரம் செய்வது இயல்பான ஒன்று.

அப்படி விலையை குறைத்து வாடிக்கையாளர்களை ஒரு பியூட்டி பார்லர் உரிமையாளர் ஈர்த்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு பியூட்டி பார்லர் உரிமையாளர் பார்லருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியில் லோகேசன் என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அருகில் பல அழகு நிலையங்கள் உள்ளன அங்குள்ள மற்ற அழகு நிலையங்களை விட குறைவான விலையில் சேவைகளை லோகேன் வழங்கியதாக தெரிகிறது .

மேலும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருவதாகவும் இதனால் அருகில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு வியாபாரம் சரிவர இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் பியூட்டி பார்லர் உரிமையாளர்களுக்கு இடையே மோதல் சென்னையில் பியூட்டி பார்லர் உரிமையாளர்களுக்கு இடையே மோதல்

இதனால் அவர்கள் லோகேசனிடம் பேசி மற்ற அழகு நிலையங்களில் வாங்கப்படும் சேவை கட்டணத்தையே அவரது கடையிலும் நிர்ணயம் செய்ய வலியுறுத்தியதாக தெரிகிறது.

ஆனால் அதற்கு லோகேன் சம்மதம் தெரிவிக்காமல் எப்போதும் போலவே விலையை குறைத்தும், ஆஃபர்களை அள்ளி வீசியும் வியாபாரத்தை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் லோகேசன் கடைக்கு வந்து உரிமையாளரின் மனைவியிடம் செல்போன் எண்ணை வாங்கி விட்டு சென்றதாகவும்

இதனையடுத்து ஒரு நாள் எதிர்பாராத விதமாக மற்றொரு பகுதியில் கடை வைத்து நடத்தி வரும் ஷாம் குமார் என்பவர் எங்களது கடைக்கு வந்து தன்னையும்  எனது மனைவியையும் தாக்க முயற்சித்தார் என்றும் குறைந்த செலவில் இது போன்று கடையை நடத்தினால் நாங்கள் எப்படி தொழில் செய்ய முடியும்? அதிக விலைக்கு நான் தொழில் நடத்துவதாக ன் தேவையில்லாமல் வெளியே கூறி வருகிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

சென்னையில் பியூட்டி பார்லர் உரிமையாளர்களுக்கு இடையே மோதல்

வாக்குவாதம் முற்றவே லோகேசன் மற்றும் அவரது மனைவியை ஷாம் குமார் கையால் தாக்கியதில் காயம் ஏற்பட்டு அரசு கீழ் பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், 

இது குறித்து மருத்துவமனை தரப்பில் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார் இந்த சம்பவம் குறித்து ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

சிசிடிவி மற்றும் செல்போன் பதிவுகளின் அடிப்படையில் கடையில் புகுந்து தாக்கிய தனியார் அழகு நிலைய உரிமையாளர் ஷாம் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்த நிலையில்   ஷாம் குமார் உடன் வந்த  மற்ற மூவரை தேடி வருகின்றனர்..

அழகு நிலையத்தில் ஆஃபர்களை அள்ளி வீசி விலையை குறைத்து சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து குறித்து சக அழகு நிலைய உரிமையாளர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ