Homeசெய்திகள்சென்னைசவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!

-

- Advertisement -

நீதிமன்ற பிடிவாரண்ட் வழக்கில் சவுக்கு சங்கருக்கு மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பிடிவாராண்டில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கில் ஜாமீன் வழங்க கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார், மேலும் 15 நாட்கள் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு.

MUST READ