Homeசெய்திகள்சென்னைசிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

-

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரின் திருவுருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவாஜியின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Image

தொடர்ந்து சிவாஜி மணிமண்டபத்தில் நடிகர் சிவாஜி கணேசன் வாங்கிய விருதுகள் மற்றும் புகைப்படங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதேபோல் சென்னையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நடிகர் பிரபுவும், தனது தந்தை சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, “மூன்று வருடங்களாக தமிழக முதலமைச்சர் நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகிறார். அதற்கு என் தந்தை மீது உள்ள பாசம் தான் காரணம், கலைஞர் , எம்ஜி ஆர், சிவாஜி கணேசன் என மூவரின் சிலையும் ஒரே இடத்தில் இருப்பது அவர்களின் ஒற்றுமையை காட்டுகிறது” என்று கூறினார்.

MUST READ