Homeசெய்திகள்சென்னைராயபுரம்: இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது – தவெக வேட்பாளர் தாமு நேரில் ஆய்வு

ராயபுரம்: இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது – தவெக வேட்பாளர் தாமு நேரில் ஆய்வு

-

- Advertisement -

ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராயபுரம்: இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது – தவெக வேட்பாளர் தாமு நேரில் ஆய்வுராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் சுரேஷ் (45)  என்பவரின் 6 லட்சம் மதிப்பிலான Maruti Suzuki Baleno கார் மற்றும் இரண்டாவது தளத்தில் குடியிருக்கும் அன்சாரி என்பவரின் நான்கு லட்சம் மதிப்பிலான Honda City என்ற இரண்டு கார்களும் வீட்டின் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

சுரேஷ் என்பவர் நேற்று மாலை ஆறு மணிக்கு தனது மாருதி சுசுகி baleno  காரை நிறுத்தி விட்டு சென்ற பிறகு Baleno கார் எலக்ட்ரிக்கல் பழுது காரணமாக முன் பகுதி தீ பிடித்து எரிந்து அருகில் இருந்த ஹோண்டா சிட்டி காரிற்கும் தீ பரவி, இரண்டு கார்களின் முன் பக்கமும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

we-r-hiring

இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள்  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் இரண்டு கார்களின் முன்பக்கம் முழுவதும் சேதம் ஏற்பட்டது.

இரண்டடி வீரவாளால் கேக் வெட்டி ராயபுரம் தவெக MLA பிறந்தநாள் கொண்டாட்டம்…

MUST READ