Homeசெய்திகள்சென்னைஎம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் பணி நிரந்தரம் கோரி போராட்டம்

எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் பணி நிரந்தரம் கோரி போராட்டம்

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூர் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் கடந்த எட்டு வருடங்களாக பணிபுரிந்து வரும் பயிற்சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் கேட்டு நேற்று  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் பணி நிரந்தரம் கோரி போராட்டம்மேலும் உயர் அதிகாரிகள் நேரடியாக எங்களை வந்து சந்தித்து எங்களிடம் கடிதம் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தி போராட்டம் செய்ததால், எம்.ஆர்.எப் நிர்வாகம் அவர்களை  தற்காலிக பணிஇடைநீக்கம் செய்துள்ளது. நேற்று இரவு பணிக்கு வந்த  தொழிலாளர்கள் உள்ளே சென்று வேலை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பயிற்சி தொழிலாளர்கள் வாசலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்ஆர்எப் நிர்வாகத்தில் நான்கு வருடத்தில் பணி நிரந்தரம் செய்வதாக கூறி எம்ஆர்எப் நிர்வாகம் பயிற்சி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாகவும், தற்பொழுது 8 வருடங்கள் ஆகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை என குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

we-r-hiring

மேலும் இதுகுறித்து தொழிலாளர் நலத்துறையில் வழக்கு பதிவு செய்து நிலுவையில் உள்ள நிலையில், கடந்த எட்டு வருடங்களாக நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்குவதாகவும், இன்றைய காலகட்டத்தில் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாததால் ஊதிய உயர்வு  குறித்து ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகம் கூறியுள்ளதாகவும், ஆனால் இரண்டு மாத காலம் ஆகியும் இதுவரை கண்டுகொள்ளாததால் பயிற்சி தொழிலாளர்கள் நேற்று காலை முதல் சாப்பிடாமல் வேலை செய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது நிலையில் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என நிர்வாகம் எச்சரித்துள்ளது. அதனை கண்டு கொள்ளாமல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நிர்வாகம்  பணியிடை நீக்கம் செய்துள்ளது. வேலைக்கு வந்த தொழிலாளர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால் தொழிலாளர்கள் வாசலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய்க்கு ஆளுநர் அவகாசம் தர வேண்டும் – வீரபாண்டியன்

MUST READ