சென்னையில் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் வெளியே இருதரப்பு திருநங்கைகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனா். இதனால் மூன்று பேரை போலீசார் கைது செய்தனா்.
சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா 43 திருநங்கையான இவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அதில் ஒருவர் தில்ஷா என்ற திருநங்கை. மூலக்கொத்தளம் யானை கவுனியைச் சேர்ந்த விமலா. குமுதா என்ற திருநங்கைகளிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இந்த இரு திருநங்கை அணிகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
சமீப காலமாக சல்மாவிடம் உள்ள திருநங்கைகள் பத்துக்கும் மேற்பட்டோர் விமலா குமுதா அணியில் சேர்ந்து உள்ளனர். அவ்வாறு சேர்ந்த திருநங்கைகள் சல்மாவின் அணியைச் சேர்ந்த திருநங்கைகள் பணம் வசூல் செய்யும் இடத்திற்கு செல்லும்போது அவர்களிடம் வீண் தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து இவர்களுக்குள் உள்ள பொதுவான கருத்துக்களை அனைவரும் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டு உள்ளனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தில்ஷா என்ற திருநங்கை வாட்ஸ்அப் குரூப்பில் எதிரணியைச் சேர்ந்தவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள தில்ஷா வீட்டிற்கு வந்த விமலா குமுதா அணியைச் சேர்ந்த திருநங்கைகள் தில்ஷா வீட்டை அடித்து உடைத்துள்ளனர். டிவி பீரோ வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு வீட்டில் இருந்த 12 சவரன் தங்கச் செயினை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது
இது குறித்து தில்ஷா திருநங்கை தலைவியான சல்மாவிடம் கூறி அவர் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சுமித்ரா. தியா ஆகிய திருநங்கைகளை பிடித்து பேசின் பிரிட்ஜ காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்த எதிரணியை சேர்த்த திருநங்கைகள் காவல் நிலையம் வந்து அவர்களை விடுவிக்கும்படி கூறியுள்ளனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே காவல் நிலையம் வெளியே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் கற்களை மாறி மாறி அடித்துக் கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து திருநங்கை சல்மா கொடுத்த புகாரின் பேரில் பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பு டாக்டர்.அம்பேத்கர் குறுக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த திருநங்கை தியா என்கின்ற தீபன் (19), திருநங்கை சுமித்ரா என்கிற விஜயகுமார் (28), திருநங்கை சுவாதி (23) என மூன்று பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் ஐந்துக்கும் மேற்பட்ட திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தனிப்பெருங்கட்சியாக உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – வழக்கறிஞர் எம்.வேல்முருகன்
