Homeசெய்திகள்சென்னைசிறப்பு அதிகாரி நியமன விவகாரம் - முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ்

சிறப்பு அதிகாரி நியமன விவகாரம் – முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ்

-

- Advertisement -

முதலமைச்சர் விஜயின் சிறப்பு பணி அதிகாரியாக ஜோதிட ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.சிறப்பு அதிகாரி நியமன விவகாரம்  - முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ்சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் பி.மகேஸ்வரி சார்பில் வழக்கறிஞர் ப.விஜேந்திரன் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் 34.92 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள் என்றும், மீதமுள்ள 65.09 சதவீத வாக்குகள் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும்  தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டமும், 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும்,  தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை ஏற்க அனுமதித்துள்ளதாகவும், முதலமைச்சராக விஜய் பதவி ஏற்ற போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக சிறப்பு பணி அதிகாரி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் இவ்வாறு நியமிக்க கூடாது என்றும் இது சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ள வழக்கறிஞர் விஜயேந்திரன் சிறப்பு அதிகாரியாக ஜோதிட ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டது திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இல்லையென்றால் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்..” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

we-r-hiring

MUST READ