- Advertisement -
முதலமைச்சரை பாராட்டிய அமமுக நிர்வாகி சி. ஆர். சரஸ்வதி
சென்னை அசோக் நகரில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை சந்தித்து பேசினார்.
சென்னை மற்றும் சென்னை புறநகரில் மேற்கொள்ளபட்டு வரும் மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை அசோக் நகர் 4 வது அவென்யூவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தப்பின் புறப்பட்ட போது, அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி நின்றிருப்பதை கண்டதும் காரில் இருந்து இறங்கி சாலையை கடந்து அவரிடம் நலம் விசாரித்து விட்டு சென்றார்.
முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து பேட்டியளித்த சரஸ்வதி, மாற்றுக் கட்சியில் இருந்தாலும், அவரை எவ்வளவோ விமர்சித்திருந்தாலும், முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்து பேசுவார் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை என கூறினார். மக்கள் பணிகளை நேரில் ஆய்வு செய்யும் முதலமைச்சருக்கு பாராட்டுக்கள் எனவும் கூறினார்.