சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது.தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தூய்மைப் பணிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்த வழக்கு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தொிவிக்கப்பட்டது. தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை, தற்காலிகமாக, தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 761 ரூபாய் ஊதியத்தை தொடர்ந்து வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது என சென்னை மாநகராட்சி தரப்பு தெரிவித்தது.
இதுகுறித்து ஒப்பந்த நிறுவனம் தரப்பில், பணியில் சேர்ந்த 800 பணியாளர்கள் மேல் முறையீடு செய்ததை அடுத்து, பணிக்கு வர மறுக்கின்றனர் எனவும் பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை நியமிக்க வேண்டி வரும் எனவும் என்று தெரவிக்கப்பட்டது. அக்டோபர் 6-ம் தேதிக்குள் மனுவிற்கு பதில் அளிக்க சென்னை மாநகராட்சிக்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆர்.சக்திவேல் தலைமையில் கொண்ட அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
அரசியல் பார்க்காமல் கல்வி நிதி வழங்க வேண்டும் – துரை வைகோ கோரிக்கை
