spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇரட்டை இலை விவகாரம் : உச்ச நீதின்றம் தள்ளுபடி

இரட்டை இலை விவகாரம் : உச்ச நீதின்றம் தள்ளுபடி

-

- Advertisement -

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதின்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இரட்டை இலை விவகாரம் : உச்ச நீதின்றம் தள்ளுபடிசென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து எம்.ஜி.ராமச்சந்மிரன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் திபான்கர் தத்தா, மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

we-r-hiring

அப்போது நீதிபதிகள், மனுவை விசாரணை ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தையே நாட அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிமுக மற்றும் இரட்டை இலை தொடர்பாக முடிவெடுக்க கோரி கே.சி.பழனிச்சாமி, புகழேந்தி, உள்ளிட்ட சிலர் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அதேவேளையில் இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது, அதில்  அதிமுக உட்கட்சி விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இம்மாதம் கடந்த 9ம் தேதி தடை வித்தது.

சென்னை  உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எம்.ஜி. ராமச்சந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ