spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகாலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வழக்கு - ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வழக்கு – ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

-

- Advertisement -

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வழக்கு - ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைப்புதமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் 2025 முதல் நடைமுறைக்கு வரும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி சுற்றுச்சூழல் மற்றும வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள்  நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா தளங்களில் உள்ள மதுபானக்  கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

we-r-hiring

அதில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவிகித பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் மாதம் முதல் திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்த நீதிபதிகள், மது பாட்டில்களுக்கு கூடுதலாக பெறப்பட்ட பணத்தை தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் நீர்நிலை மற்றும் வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.

பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துடன் பாட்டில்களின்  மூடியை மாற்றுவதா? அல்லது திரும்ப பெறுவதா? என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

MUST READ