சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள “ஹாவோடா பேமென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட”ஹாவோடா பேமென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனத்தில், ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் நிர்வகிக்க வணிகங்களுக்கு கட்டண நுழைவாயில்கள், பயன்பாட்டு பில் கொடுப்பனவுகள், கார்ப்பரேட் பேஅவுட்கள் மற்றும் API ஒருங்கிணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டண தீர்வுகளை இது வழங்குகிறது.
சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கதுறை அதிகாரிகள் 6 பேர் இன்று காலை 7.30 மணியிலிருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாடா பேமென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர்களாக ராஜேந்திரன் கீர்த்தனா மற்றும் ராஜேந்திரன் விக்னேஷ்வர் ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனத்தில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



