spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான போலி கடித விவகாரம்: வழக்கறிஞர்கள் புகார்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான போலி கடித விவகாரம்: வழக்கறிஞர்கள் புகார்

-

- Advertisement -

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போலி கையொப்பம் மூலம் கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் அனுபப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான போலி கடித விவகாரம்: வழக்கறிஞர்கள் புகார்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றக்கோரி அண்மையில்  பிரதமர், உள்துறை அமைச்சர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு  700 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டிருந்ததாக கூறி கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.

we-r-hiring

இந்நிலையில், அந்த கடிதத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படும் பல வழக்கறிஞர்கள் கையெழுத்துகள் போலி எனவும் வேறொரு  விவகாரத்திற்காக கடந்த 2013 ம் ஆண்டு  பெறப்பட்ட கையெழுத்தை இந்த கடிதத்தில் இணைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஶ்ரீராம் பதவியேற்றதில் இருந்து அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் நிலையில் அவர் மீது அவதூறு பரப்பும் வகையில்  அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

போலியான கையெழுத்து மூலம் அவதூறுபரப்ப முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

MUST READ