Homeசெய்திகள்சென்னைமணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து - சென்னை முழுவதும் திடீர் கரண்ட்...

மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து – சென்னை முழுவதும் திடீர் கரண்ட் கட்

-

- Advertisement -

மணலி துணை மின் நிலையத்தில்  தீ விபத்து - சென்னை முழுவதும் திடீர் கரண்ட் கட்

மணலியில் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்பு.

மின் விநியோகத்தை சீர் செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், உயர் மின் கோபுரங்கள் வழியாக, 400 கிலோ வாட் திறனுடைய மணலி மின் பகிர்மான நிலையத்திற்கு எடுத்து வரப்படுகிறது. இந்த நிலையில் மணலி எம்.எஃப்.எல் கூட்டு சாலை அருகில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் செல்லக்கூடிய உயர் அழுத்த மின் கோபுர வழித்தடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், ராயபுரம், மணலி, பெரம்பூர் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய சென்னையில் உள்ள அமைந்தகரை, கோடம்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், மதுரவாயில், அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு உடனடியாக சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு வழங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பூந்தமல்லி, போரூர் போன்ற புறநகர் பகுதிகளில் 1 மணி நேரத்தில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்ட நிலையில் மற்ற பகுதிகளிலும் மின் விநியோகம் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் – புகார்களை நேரடியாக பெற சிறப்பு முகாம் ஏற்பாடு

சாலிகிராமம், கோடம்பாக்கம், கொடுங்கையூர் என பல்வேறு பகுதிகளில் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மின் விநியோக பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

MUST READ